×

விமான தடையால் மகனின் இறுதி சடங்கை ஆன்லைனில் கண்டு பெற்றோர் கதறல்

துபாய்: விமான தடை காரணமாக, கேரளாவில் நடந்த மகனின் இறுதிச் சடங்கை, துபாயில் உள்ள பெற்றோர் ஆன்லைனில் பார்த்து கதறி அழுதனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ஜா நகரில் கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகன்கள்.  மூத்த மகன் ஜுவல் ஜி ஜொமெ இங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு கடந்த 7 ஆண்டுகளாக புற்று நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக அவன் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் உடல் நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி அன்று ஜூவல் இறந்தான். பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு இவன் இறந்த சோகம் நிகழ்ந்தது.

மிகுந்த மனம் உடைந்த சிறுவனது  பெற்றோர், அவனது உடலை, கேரளாவில் உள்ள சொந்த ஊரான பத்தனம்திட்டாவில் அடக்கம் செய்ய  விரும்பினர். அரசு அதிகாரிகளின் உதவியோடு இவரது உடலை சரக்கு விமானத்தின் மூலம் இந்தியா கொண்டு செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால் சிறுவனது பெற்றோர்  இந்தியா வர அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சிறுவனது உடல் மட்டும் இந்தியா எடுத்து செல்லப்பட்டு சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெற்றது. இதனை சார்ஜாவிலிருந்து அவனது குடும்பத்தினர் ஆன்லைன் மூலம் பார்த்து கதறி அழுதனர். யூடியுபில் இந்த நேரடி ஒளிபரப்பை ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர். கொரானா பலரின் வாழ்வியல் சூழலை தலைகீழாக மாற்றி விட்டது.


Tags : Parents ,funeral ,flight ban parents , Airbnb, son funeral, online, corona virus
× RELATED பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி...